/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சத்குரு
/
பிடித்ததைச் செய்ய வேண்டாம், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்.
/
பிடித்ததைச் செய்ய வேண்டாம், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்.
பிடித்ததைச் செய்ய வேண்டாம், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்.
பிடித்ததைச் செய்ய வேண்டாம், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்.
ADDED : நவ 22, 2014 06:11 PM

மனிதர்கள் உடலைத் தாண்டிய பரிமாணத்தின் அனுபவத்தை உணரும்போது, வன்முறை அபரிமிதமாக குறைந்துவிடும்.
உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்வது வெறும் பாசாங்கே, அதனை உங்களால் காலத்திற்கும் நிலைக்கச் செய்ய முடியாது. உங்கள் அடிப்படையையே மாற்றியமைப்பதே யோக முறை.
நீங்கள் இவ்வுலகில் வாழும் ஓர் உயிராக இருக்கும்போது, படைத்தவனின் கரங்கள் உங்களை தொட்டுவிட்டதாகத்தான் அர்த்தம். இதனைவிட சிறந்த ஆசீர்வாதம் வேறு கிடையாது.
உங்களுக்கு பிடித்ததைச் செய்ய வேண்டாம், உலகிற்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கள். உங்களுக்கு பிடித்ததைச் செய்வது சுதந்திரம் அல்ல. பிடித்ததும்-பிடிக்காததும் நிர்பந்திக்கும் குணங்களே.
அத்தனையும் ஒரு மூலத்திலிருந்தே தோன்றுகின்றன. தனி மனிதராக அல்லாமல், பிரபஞ்சத்தின் ஒரு பாகமாக உணரும்போதுதான் நீங்கள் முழு தளர்வு நிலையில் இருக்க முடியும்.